1966 இல முதல பதிபபு வெளிவநத காலததிலிருநது தீவிர வாசகரகளின கவனததில இருநதுவரும ஒரு புளியமரததின கதை ஒரு நவீன செவவியல புனைவாக நிலைபெறறுவிடடது. மலையாளததிலும இநதியிலும மொழிபெயரககபபடடுளள இநநாவலின ஆஙகில மொழிபெயரபபை பெஙகுயின வெளியிடடது. 2000 ததில தமிழிலிருநதுMore1966 இல் முதல் பதிப்பு வெளிவந்த காலத்திலிருந்து தீவிர வாசகர்களின் கவனத்தில் இருந்துவரும் ஒரு புளியமரத்தின் கதை ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது.
மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுளள் இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளியிட்டது. 2000 த்தில் தமிழிலிருந்து நேரடியாக ஹீப்ருவில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு புளியமரத்தின் கதை குறுகிய காலத்தில் இரண்டு பதிப்புகள் கண்டதுடன் அம்மொழிக்குச் சென்றுள்ள முதல் இந்திய மொழி நூல் என்ற பெருமையையும் பெறுகிறது.
ஒப்பீட்டிலக்கிய விமர்சகர் கே.எம்.ஜார்ஜ் இந்நாவலை நோபல் பரிசு பெறத் தகுதியான தமிழ் நாவலாகக் குறிப்பிடுகிறார்